Featured Posts

<< >>

உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி

‘எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

முள்ளிவாய்க்கால் வலிகள் தந்த வாரம்: யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமாகஅனுஷ்டிப்பு

ஆயிரக்கணக்கிலான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி

‘எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். » Read more..

முள்ளிவாய்க்கால் வலிகள் தந்த வாரம்: யாழ்.பல்கலையில் உணர்வு பூர்வமாகஅனுஷ்டிப்பு

ஆயிரக்கணக்கிலான தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 3ம் ஆண்டு நினைவு தினம் பலத்த இராணுவ நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.40 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வு 12.15 வரை தொடர்ச்சியாக நடைபெற்றது. » Read more..

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் மீது இனந்தெரியாதோர் இரும்புக்கம்பித்தாக்குதல்! மாணவர்கள் முற்றுகைப்போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.வழமை போல இன்று காலை பல்கலைக்கழகம் நோக்கி துவிச்சக்கரவண்டியினில் வந்து கோண்டிருந்த இவர் மீது கலட்டி சந்தியில் வைத்து நால்வர் கொண்ட ஆயுததாரிகள் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. » Read more..

யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர். » Read more..

யாழைச் சேர்ந்த பெண் வைத்தியர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், தனக்கு தானே சிகிச்சை செய்து கொண்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் சிலாபத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் வடமராட்சி வியாபாரி மூலையைச் சேர்ந்த வைத்தியரான திருமதி பிரணவன் நீராயா வயது 27 என்ற பெண் வைத்தியரே மரணமானவராவார். » Read more..

யாழில் இராணுவத்தினரின் யுத்தவெற்றி நிகழ்வு!மாணவர்கள் படையினருக்கு சின்னம் சூட்டினர்.

யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ். பலாலியில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன், யுத்தத்தில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், படைத்தரப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர் » Read more..

யாழில் மாம்பழ சீஷன்!

யாழ்.குடாநாட்டில் தற்போது தென்னிலங்கையிலிருந்து அப்பிள், அன்னாசி, தோடம்பழம், மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற பழங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றபோதும் யாழ்ப்பாண மாம்பழத்திற்கான மவுசு இன்னமும் குறையவில்லை.கறுத்தக் கொழும்பான், விளாட்டு, அம்பலவி ,வெள்ளைக்கொழும்பான், செம்பாட்டான் போன்ற மாம்பழ வகைகள் தற்போது திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. » Read more..

யாழ். பல்கலை மருத்துவபீடத்தின் ‘சுகவாழ்வை நோக்கி’ மருத்துவக் கண்காட்சி

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் ‘சுகவாழ்வை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.யாழ். பல்கலைக்கழக மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் ஆரம்பித்து வைக்கவுள்ளார். » Read more..

யாழ். இந்து மாணவன் தேசிய மட்டத்தில் புதிய சாதனை

தேசிய மட்ட கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் புதிய சாதனை ஒன்றினை நிலைநாட்டியுள்ளார்.கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2012ம் ஆண்டுக்கான தேசிய கனிஷ்ட மெய்வல்லுணர் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம்பாய்தலில் யாழ். இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வன் இரட்ணசிங்கம் செந்தூரன் 192 சென்ரி மீற்றர் உயரத்தைக் கடந்து இந்த புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார். » Read more..

திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு

யாழ். காரைநகர் பிரதேச செயலரின் தொலைபேசியைத் திருடியதாக கூறப்படும் நபரை யாழ். பொலிஸார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளனர் யாழ். நகரப்பகுதியில் வைத்து இன்று செவ்வாய்கிழமை காலை காரைநகர் பிரதேச செயலரின் கைப்பையில் இருந்த சுமார் 66 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசி திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது. » Read more..

2012ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் இடாப்புக்களை திருத்த ஏற்பாடு

2012ஆம் ஆண்டுக்கான பதிவு செய்யப்பட்ட தேர்தல் வாக்காளர் இடாப்புக்களை யாழ். மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான கலந்துரையாடல்கள் வியாழக்கிழமை முதல் நடைபெறவுள்ளன. பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் இக்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் பி.குகநாதன் தெரிவித்துள்ளார். » Read more..

இந்த மாதத்துடன் வெளியேறுகிறது டனிஷ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு

யாழ்.மாவட்டத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாடுகளில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், ஹலோட் ரஸ்ற் மற்றும் இராணுவத்தினரின் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் பிரிவு ஆகியன ஈடுபட்டு வந்தன. தொடர்ச்சியாக நிதிப் பற்றாக்குறைகள் இருப்பதன் காரணமாக டனிஷ் கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தனது பணியாளர்களைக் குறைத்துக் கொண்டு வந்தது. இந்த நிலையில் தொடர்ந்தும் இயங்க முடியாத இக்கட்டான நிலைமைக்கு இந்த நிறுவனம் தள்ளப்பட்டதால் இந்த மாத இறுதியுடன் பணிகளை நிறுத்தி அதனை மூடிவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர். » Read more..

காங்கேசன்துறை சீமெந்து ஆலை வருட இறுதியில் உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது

1950 ஆம் ஆண்டில், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை, இந்த வருட இறுதியில் தமது உற்பத்திகளை ஆரம்பிக்கவுள்ளது.அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து ஆலை. தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது. » Read more..

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்.அரச அதிபராகக் கடமையாற்றி திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் நிலையிலேயே, மட்டக்களப்பு அரச அதிபராக கடமையாற்றிய சுந்தரம் அருமைநாயகம் யாழ்.அரச அதிபராக நியமிக்கப்பட்டார். » Read more..

முதலாவது பெண் அரச அதிபராகி பெருமை சேர்த்தவர் இமெல்டா- அரச அதிகாரிகள் பலரும் பாராட்டு

யாழ். மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகப் பதவியேற்று, மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவை செய்து மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்று, தேசிய விருதுகளை வென்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்தவர் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்.இவ்வாறு திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலர்கள், கணக்காளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், சிற்றூழியர்கள் அனைவரும் அவரை நேற்றுப் பாராட்டி வாழ்த்தினர். » Read more..