யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுது போக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனங்கள் நோயாளர்களின் நலன்களுக்காக பாரிய உதவி திட்டங்களை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
