10:44 pm - Tuesday July 25, 2017

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகள் அல்ல: பொலிஸ் மா அதிபர்

வடக்கில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் பயங்கரவாத செயற்பாடுகளாக கொள்ள முடியாதென்பதுடன், நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் உட்படுத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையின் செய்திச்சேவை ஒன்றிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளக் கூடிய அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறன குறுகிய நோக்கங்கள் கொண்ட செயற்பாடுகள் காரணமாக நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை. அத்துடன் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்போவதில்லை” என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

Filed in: செய்திகள், பிரதான செய்திகள்

Comments are closed.