3:16 pm - Tuesday September 19, 2017

மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!!!

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில்  இன்று,  8 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா, ஹொன்ரோஸ், எக்குவடோர் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான பொனின் தீவிற்கு அருகில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள இந்த போனின் தீவுக்கு சொந்தமான சிமோடா தீவில் கடலுக்கு அடியில் 450 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Filed in: உலகம், செய்திகள், பிரதான செய்திகள்

Comments are closed.